மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 2 கல்லூரி மாணவிகள் கைது ஆண் நண்பர்கள் உள்பட மேலும் 3 பேர் சிக்கினர்
மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 2 கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவர்களது ஆண் நண்பர்கள் உள்பட மேலும் 3 பேர் சிக்கினர்.
மும்பை,
மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த 2 கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவர்களது ஆண் நண்பர்கள் உள்பட மேலும் 3 பேர் சிக்கினர்.
செல்போன் திருட்டு
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் காலை நேரத்தில் போரிவிலியில் இருந்து சர்ச்கேட் செல்லும் ஒரு மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் பயணிக்கும் பயணிகளை குறி வைத்து செல்போன்கள் திருடப்பட்டு வந்துள்ளன.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் பயணிகள் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
இதில், இளம்பெண் இருவர் தகிசர் ரெயில் நிலையத்தில் தினசரி 8.15 மணிக்கு சந்திப்பதும், பின்னர் இருவரும் அங்கிருந்து ஒரு மின்சார ரெயிலில் ஏறி போரிவிலி செல்வதும், அங்கிருந்து சர்ச்கேட் புறப்படும் ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி பெண் பயணிகளிடம் செல்போன்களை திருடி கொண்டு காந்திவிலி ரெயில் நிலையத்தில் இறங்குவதும் தெரியவந்தது.
கல்லூரி மாணவிகள் கைது
இதையடுத்து, அதிரடியாக இளம்பெண்கள் இருவரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் தகிசர் பகுதியை சேர்ந்த டிவிங்கிள் (வயது20), தினால் (19) என்பதும், கல்லூரி மாணவிகள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. கல்லூரி மாணவிகள் இருவரும் தாங்கள் திருடிய செல்போன்களை தங்களது ஆண் நண்பர்கள் இருவரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் போரிவிலியில் செல்போன் கடை நடத்தி வரும் ராகுல் ராஜ்புரோகித் (28) என்பவரிடம் அதை விற்று பணமாக்கி கொடுத்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் கூறிய இந்த தகவலை தொடர்ந்து, ராஜ்புரோகித்தை போலீசார் கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் அவர்களது ஆண் நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 28 திருட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story