அரசியல் பேரத்துக்காகவே அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தாக்கு
அரசியல் பேரத்துக்காகவே அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.
மும்பை,
அரசியல் பேரத்துக்காகவே அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.
அமித் ஷா வருகை
பா.ஜனதா கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகள் குறித்து ‘சம்பர்க் சே சமர்தான்’ எனும் பெயரில் பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை வந்தடைந்த பா.ஜனதா தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நேற்று சந்தித்தார்.
இந்தநிலையில் அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு குறித்து மராட்டிய காங்கிர தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-
அமித் ஷா மற்றும் உத்தவ் தாக்கரேவுக்கு இடையேயான தற்போதைய சந்திப்பு அரசியல் பேரத்துக்காக நடைபெற்ற ஒன்றாகும். பா.ஜனதா உடனான தனது கூட்டணியை சிவசேனா ஒருபோதும் முறித்துக்கொள் ளாது. சிவசேனா தொடர்ச்சியாக பா.ஜனதாவை விமர்சித்து வருவது லாபகரமான அரசியல் பேரத்தை முன்வைப்பதற்காக அந்த கட்சி கையாளும் ஒரு தந்திரம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டில் சிறை பிடிக்கப்பட்டதுபோல்...
இதற்கிடையே மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், அமித் ஷாவின் மும்பை வருகையை தொடர்ந்து தனது வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் தான் வீட்டில் சிறை பிடிக்கப்பட்டதுபோல் தற்போது இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமித் ஷாவின் மும்பை பயணத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் எந்தவித போராட்டமும் அறிவிக்கப்படாத நிலையில் தனது வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது தனிநபரின் குடியுரிமைக்கு எதிரானது என கூறினார்.
Related Tags :
Next Story