பா.ஜனதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சி சரத் பவார் குற்றச்சாட்டு

பா.ஜனதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சி சரத் பவார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jun 2018 4:20 AM IST (Updated: 7 Jun 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தனதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டினார்.

நவி மும்பை, 

பா.ஜனதா தனதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டினார்.

மேல்சபை தேர்தல்

கொங்கன் பட்டதாரிகள் மேல்சபை தொகுதிக்கான தேர்தல் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நஜீப் முல்லா என்பவர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று நவி மும்பை வாஷியில் நஜீப் முல்லாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மீதான ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு பா.ஜனதாவின் அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்று திரள...

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பா.ஜனதா அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது. இதேபோல மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

இதையடுத்து சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டிய சரத் பவார், வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story