துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ஹரி ஆறுதல்

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இயக்குனர் ஹரி ஆறுதல்
x
தினத்தந்தி 8 Jun 2018 2:45 AM IST (Updated: 8 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரைப்பட இயக்குனர் ஹரி ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரைப்பட இயக்குனர் ஹரி ஆறுதல் கூறினார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் உடல்கள் பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜின் உடல் நேற்று காலையில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் திரைப்பட இயக்குனர் ஹரி கலந்து கொண்டார்.

நிதி உதவி

மேலும், உயிர் இழந்த சுனோலின், ஜான்சி, காளியப்பன் ஆகியோர் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார். அப்போது ஸ்டண்டு மாஸ்டர் சில்வா, வக்கீல் செங்குட்டுவன் மற்றும் சிலர் உடன் இருந்தனர்.

Next Story