நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:00 AM IST (Updated: 8 Jun 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றபோது அவர் ஆதிதிராவிட வகுப்பு என்பதால் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புபேஸ்குமார், மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தளபதிராஜ், மண்டல தலைவர் ஜெகதீசன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் ராம.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட அமைப்பாளர்கள் முருகையன், சாமிநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன், நாகை நகர தலைவர் குஞ்சுபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகை ஒன்றிய தலைவர் செல்வராசு நன்றி கூறினார். 

Next Story