காலா திரைப்படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு
நெல்லையில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை,
நெல்லையில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காலா திரைப்படம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலா திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாநகர பகுதியில் பூர்ணகலா, பேரின்பவிலாஸ், பாம்பே ஆகிய 3 தியேட்டர்களில் காலா திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களின் முன்பு ரஜினி ரசிகர்கள் பேனர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைத்து இருந்தனர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ரசிகர்கள் பங்கேற்கும் காட்சி திரையிடப்பட்டது. இதில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகல் 11.15 மணி காட்சிக்கு கூட்டம் அதிகளவில் இல்லை. இந்த 3 தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story