திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்பு


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் செய்தபோது அங்குள்ள கோவிலுக்குள் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்னேஷ்வரி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி அந்தோணி ஆகியோரும் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். 

Next Story