மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது + "||" + Police arrested a fake doctor near Kalimangalam

காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது

காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது
காரிமங்கலம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பொன்னுராஜ் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களின் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காரிமங்கலம் ஒன்றியம் கேத்தனஅள்ளி ஊராட்சி கெட்டூரில் அலோபதி மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நலப்பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் சசிகுமார், உதவியாளர் ராஜேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வீட்டில் அலோபதி மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் தாண்டவன் (வயது 37) என்பதும், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னகரடியூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் நடத்தி வந்த கிளினிக்கை சோதனை செய்தபோது அங்கு அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்தும் ஏராளமான ஊசி மருந்துகள், சிரிஞ்சுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு அலோபதி ஊசிமருந்துகளை செலுத்தி மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர், போலி டாக்டர் தாண்டவன் நடத்தி வந்த கிளினிக்குக்கு சீல் வைத்தனர். பின்னர் அவரை காரிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் தாண்டவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆதார் எண் இணைக்கப்பட்டதால் தெரியவந்தது 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிப்பு
ஆதார் எண் இணைக்கப்பட்டதால் 6 ஆயிரம் போலி வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார்.
2. போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தவர் கைது கார், மதுபாட்டில்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. வாணியம்பாடி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு; ஒருவர் கைது
வாணியம்பாடி அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த தொழிற்சாலையில் எரிசாராயம் மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4. செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசிடம் இருந்து ரூ.3,558.21 கோடி நிதியை பெற செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. வீட்டில் இருந்தபடியே போலி ரெயில் டிக்கெட் தயாரித்து விற்ற வாலிபர் கைது
வீட்டில் இருந்தபடியே போலியான ரெயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்த வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.