பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது
பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
விழுப்புரம்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகள் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்று, கல்வி செயல்பாடுகள் உள்ளிட்ட பிற தனித்திறன்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான காமராஜர் விருது வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிளஸ்-2 மாணவ- மாணவிகள் 15 பேருக்கு காமராஜர் விருதான தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் 15 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் நீலாம்பாள், கிருஷ்ணப்பிரியா, சசிகலா, கிருஷ்ணன், ஆனந்தன், ரத்தினசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story