குமாரசாமியுடன் கஸ்தூரிரங்கன் சந்திப்பு கர்நாடக வளர்ச்சி குறித்து ஆலோசனை


குமாரசாமியுடன் கஸ்தூரிரங்கன் சந்திப்பு கர்நாடக வளர்ச்சி குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 8 Jun 2018 4:00 AM IST (Updated: 8 Jun 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமியை கஸ்தூரிரங்கன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் கர்நாடக வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.

பெங்களூரு,

குமாரசாமியை கஸ்தூரிரங்கன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் கர்நாடக வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.

16 அம்சங்கள் அடங்கிய...

முதல்–மந்திரி குமாரசாமியை பெங்களூருவில் நேற்று அறிவுசார் ஆணைய தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். கர்நாடகத்தின் வளர்ச்சி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்குப்பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் வளர்ச்சிக்கு ஏற்ப 16 அம்சங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை அரசிடம், கஸ்தூரிரங்கன் தலைமையிலான அறிவுசார் ஆணையம் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக ஏரிகளை பாதுகாத்தல், தண்ணீரின் தரத்தை உறுதி செய்தல் போன்றவை அடங்கும். அந்த அறிக்கையில் கல்வி, சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை, கலாசாரம், உயிர் அறிவியல், தொழிற்பயிற்சி போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. நிலத்தடி நீரை பாதுகாப்பது போன்ற வி‌ஷயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த முக்கியமான அம்சங்கள் பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தொழில் முதலீடுகள்

அதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் தலைமையிலான குழுவினர் குமாரசாமியை சந்தித்து பேசினர். கர்நாடகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு பாரத சாரண–சாரணியர் கர்நாடக தலைமை கமி‌ஷனர் பி.ஜி.ஆர்.சிந்தியா தலைமையிலான குழுவினர் முதல்–மந்திரியை சந்தித்து பேசினர்.


Next Story