மாவட்ட செய்திகள்

குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா? அதிகாரிகள் திடீர் சோதனை + "||" + Child workers Are in the work Officers sudden raid

குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா? அதிகாரிகள் திடீர் சோதனை

குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா?
அதிகாரிகள் திடீர் சோதனை
கோத்தகிரி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோத்தகிரி,

தொழிலாளர் ஆணையர் செந்தில் குமாரி அறிவுரையின் படி குன்னூர் தொழிலாளர் இணை ஆணையர் தங்கவேல் மற்றும் உதவி ஆணையர் கிரிராஜன் ஆகியோர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாஸ்கர், சைல்டு லைன் உறுப்பினர் மதன்குமார், பள்ளி செல்லா குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா? என திடீர் சோதனை செய்தனர்.


மேலும் குழந்தைகளுக்கான சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் 1098 என்பதை அனைவருக்கும் எளிதில் தெரியும் வகையில் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அவ்வாறு பணியில் அமர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மீட்கப்படும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.