மாவட்ட செய்திகள்

மும்பையில் ‘காலா’ படம் வெளியீடு கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம் + "||" + 'Gala' release in Mumbai Festival celebration in the raining rain

மும்பையில் ‘காலா’ படம் வெளியீடு கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

மும்பையில் ‘காலா’ படம் வெளியீடு
கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம்
மும்பையில் ‘காலா’ படம் வெளியானது. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
மும்பை, 

மும்பையில் ‘காலா’ படம் வெளியானது. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

காலா படம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நேற்று வெளியானது. மும்பை தாராவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று மும்பையில் இந்த படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண் டாடினார்கள்.

‘காலா’ படத்தை வரவேற்று தியேட்டர்களில் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. வடலா ஐமெக்ஸ் மற்றும் மாட்டுங்கா அரோரா தியேட்டர்களில் ரசிகர் களுக்கான சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு காண்பிக்கப்பட்டது.

சிறப்பு காட்சியை பார்ப் பதற்காக ரசிகர்கள் அதிகாலை 5 மணிக்கு முன்னரே இந்த தியேட் டர்களில் திரண்டனர்.

கொட்டும் மழையில் கொண்டாட்டம்

அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ரசிகர்கள் ரஜினியின் உருவப்படத்தை உடலில் வரைந்து வந்து உற்சாகமாக ஆட்டம் போட்டனர்.

மராட்டிய மாநில ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநில தலைவர் எஸ்.கே.ஆதிமூலம் தலைமையில் பெண்கள் வடலா ஐமெக்ஸ் தியேட்டருக்கு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து ரஜினிகாந்தின் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் மாநில மகளிரணி செயலாளர் அட்லின் அருள், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாட்டுங்கா அரோரா தியேட்டரில் நடந்த கொண்டாட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த ஆனந்தராஜ், ராஜேந்திரன், புஷ்பராஜ், கிறிஸ்டோபர், மாரியோமஸ்கனக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.