நாசிக் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மினிபஸ் மோதி 10 பேர் சாவு 12 பேர் படுகாயம்


நாசிக் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மினிபஸ் மோதி 10 பேர் சாவு 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:30 AM IST (Updated: 8 Jun 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

நாசிக் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மினிபஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக இறந் தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

நாசிக், 

நாசிக் அருகே சாலை யோரம் நின்ற லாரி மீது மினிபஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

ஆன்மிக சுற்றுலா

தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மினிபஸ் மூலம் மத்திய பிரதேச மாநிலம் உஜ் ஜெயினுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு இவர்கள் நேற்று மினிபஸ்சில் வீடு திரும்பினர்.

நாசிக் மாவட்டம் சந்த்வாட் அருகே மும்பை ஆக்ரா நெடுஞ்சாலையில் இவர்களது பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு டயர் பஞ்சர் காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது எதிபாராதவிதமாக மினிபஸ் வேகமாக மோதியது.

10 பேர் சாவு

இந்த கோர விபத்தில் மினிபஸ்சில் பயணம் செய்த 10 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலியானோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story