மாவட்ட செய்திகள்

முல்லுண்டில் ரெயில் முன் தள்ளிவிட்டு வியாபாரியை கொன்ற வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார் + "||" + Throw forward in the front of the train The college student was trapped in the case of killing a businessman

முல்லுண்டில் ரெயில் முன் தள்ளிவிட்டு வியாபாரியை கொன்ற வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார்

முல்லுண்டில் ரெயில் முன் தள்ளிவிட்டு
வியாபாரியை கொன்ற வழக்கில் கல்லூரி மாணவர் சிக்கினார்
முல்லுண்டு ரெயில் நிலையத்தில் வியா பாரியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் போலீ சாரால் தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

முல்லுண்டு ரெயில் நிலையத்தில் வியா பாரியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் போலீ சாரால் தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

வியாபாரி கொலை

மும்பை முல்லுண்டு ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனிஷா(வயது38) என்ற பெண் பயணியை தீபக் பட்வா(56) என்ற வியாபாரி உரசியதாக தகராறு உண்டானது. அப்போது, அங்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு ஆதரவாக தீபக் பட்வாரிடம் சண்டையிட்டார்.

பின்னர் இருவரும் சேர்ந்து தீபக் பட்வாவை தண்ட வாளத்தில் தள்ளிவிட்டனர். இதில், அந்த வழியாக வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு தீபக் பட்வா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த காட்சிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

கல்லூரி மாணவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிஷாவை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி ேதடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர் தானேயை சேர்ந்த அக்சய் மாங்கே (21) என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், அவர் தானேயில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.