மாவட்ட செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர் + "||" + Bleeding labor pain To the hospital for the hospital The cradle was lifted

பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்

பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்
கனமழையால் மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிப்பு, பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர் அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி எடவாணி கிராமத்தை சேர்ந்தவர் தனலி. அவருடைய மனைவி மணி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் கனமழை கொட்டியது. அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


பிரசவ வேதனையில் துடித்த மணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது எப்படி? என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர். பின்னர் பெரிய கம்பில் தொட்டில் கட்டி, அதன் மூலம் மணியை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அதாவது, அரளிக்கோணம் வரை கரடுமுரடான மலைப்பாதை வழியாக இவ்வாறு தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்.

அரளிக்கோணத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கோட்டத்தரை அரசு சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அந்த கர்ப்பிணி பெண்ணை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கோட்டத்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.