தூத்துக்குடியில் என்ஜினீயரிங் கலந்தாவிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது 14–ந்தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடியில் என்ஜினீயரிங் கலந்தாவிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது 14–ந்தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 8 Jun 2018 9:00 PM GMT (Updated: 8 Jun 2018 7:42 PM GMT)

தூத்துக்குடியில் என்ஜினீயரிங் கலந்தாவிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 14–ந்தேதி(வியாழக்கிழமை) வரை நடக்க உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் என்ஜினீயரிங் கலந்தாவிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 14–ந்தேதி(வியாழக்கிழமை) வரை நடக்க உள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகள்

தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3–ந்தேதி முதல் ஜூன் 2–ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரது 631 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

இதில் விண்ணப்பித்த மாணவ– மாணவிகளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. இதற்காக 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்ட உதவி மையத்தில் நேற்று காலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுமார் 180–க்கும் மேற்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணி வருகிற 14–ந்தேதி(வியாழக்கிழமை) வரை நடக்க உள்ளது.

Next Story