மாவட்ட செய்திகள்

குன்னத்தூரில் ஓய்வூரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The pedestrians demonstrated

குன்னத்தூரில் ஓய்வூரியர்கள் ஆர்ப்பாட்டம்

குன்னத்தூரில் ஓய்வூரியர்கள் ஆர்ப்பாட்டம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குன்னத்தூர்,

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊத்துக்குளி வட்டார தலைவர் எம்.பாக்கியநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் ஜார்ஜ் முன்னிலைவகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மாத மருத்துவப்படி ரூ.1,000 வழங்கவேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் வட்டார செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றிகூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி அனைத்து பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி, அடுத்த மாதம் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் கு.பாலசுப்பிரமணியன் தகவல்
ரேஷன்கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
4. கூடலூரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.