மாவட்ட செய்திகள்

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு + "||" + Rameshwaram, Dhanushkodi area sea turmoil

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு
ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், பாம்பன் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் கடந்த இரு நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

மேலும் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. விளம்பர போர்டுகள், கூரைகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பறந்தன. தனுஷ்கோடி சாலையின் தெற்கு பகுதியில் இருந்து மணல் காற்றில் பறந்து சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மணலில் சிக்கி திண்டாடி வருகின்றனர்.

இதேபோல ராமேசுவரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் சுழல் காற்று வீசுகிறது. இதனால் குப்பைகள் மற்றும் மணல் காற்றில் பறந்து வந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் நடமாட தயங்குகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம் கோவிலில் 30 தீர்த்தங்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு; கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்
ராமேசுவரத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய 30 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அவற்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பக்தர்களுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
2. ராமேசுவரம் கடல் கண்காணிப்பு பணியில் மேலும் ஒரு அதிவேக கப்பல்
ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மேலும் ஒரு அதிவேக கப்பல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
3. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பலத்த காற்றுடன் மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.