மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + Apply for Padma Shri Awards Collector shilpa information

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

விருதுகள்

தமிழ்நாட்டில் கல்வி, கலை, வணிகம் மற்றும் தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகநலன், பொதுத்துறை ஆகிய ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம விபூ‌ஷன், பத்மபூ‌ஷன் ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவன்று ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களிடம் இருந்து இந்த விருதுகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணையதள முகவரியான www.padmaawads.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 3 நகலுடன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நல அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 28–ந்தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.