மாவட்ட செய்திகள்

ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார் + "||" + Of Muslims Ramzan is a fast opening Minister Vijaya Bhaskar participated

ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்

ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்
இலுப்பூரில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் நேற்று இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-


புனிதமான ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 30 நாட்கள் இந்த நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக குரானில் தெரிவிக்கப்பட்டுள்ள கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் உள்ளிட்ட 5 கடமைகளில் ஒன்றான நோன்பு இருக்கும் நிகழ்வு மகத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் சகோதர உணர்வுடன் கலந்து கொள்வது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான நிகழ்வாகும்.

இலுப்பூர் பகுதிக்கு தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இலுப்பூர் கல்வி மாவட்டம் தற்பொழுது புதிதாக தொடங்கப்பட்டுள்ளதை இங்கு மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இலுப்பூர் பகுதிக்கு தேவையான அனைத்தையும் உடனுக்குடன் செய்து கொடுக்க தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடல் கடந்து வணிகம் மற்றும் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நமது மண்ணின் மைந்தர்களின் சேவை போற்றுதலுக்குரியதாகும். உங்கள் அனைவருக்கும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.