10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி


10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 10:18 PM GMT)

10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன.

மும்பை, 

10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன.

காமராஜர் பள்ளி

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மும்பையில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன. பல பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தன. தாராவி 90 அடி சாலையில் திருநெல் வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதி னர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர்.

மாணவி திக்‌ஷா யாதவ் 93.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலி டமும், அன்சாரி குலாப்ஷா 91.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ராபே ஹசன் 91.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மைக்கிள்ராஜ் வாழ்த்தினார்.

காந்தி நினைவு பள்ளி

மாட்டுங்கா லேபர்கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 95 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவி முத்து சினேகா 91 சதவீத மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத் திலும், சுவாதி புஜாரி 90.80 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்திலும், மொகிதீன் பாத்திமா 89.80 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் செல்லத்துரை வாழ்த்து தெரிவித்தார்.

பி.எஸ்.ஐ.ஏ.எஸ்.பள்ளி

தாராவியில் பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம் நிர்வகித்து வரும் பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் தங்கர் நவ்நீத் கணேஷ் 89.53 சதவீதம், மாணவி கோமதி கனகா நாயகம் 80.20 சதவீதம், மாணவர் அன்சாரி ஆவேஷ் 75.88 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர் களை சங்க பொதுச்செயலாளர் மாறன் நாயகம், தலைமை ஆசிரியை மாரி அருணாச்சலம் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

ராமலிங்கம் பள்ளி

கோவண்டியில் உள்ள ராமலிங்கம் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தது. அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 56 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.

பள்ளியில் மாணவர் பிராஞ்ஜெய் திவாரி 94 சதவீத மதிப்பெண் பெற்று முதலி டமும், சேக்பரின் 91.42 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், ஜான்வி அன்பழகன் 89.42 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.

பாண்டுப் பிரைட்

பாண்டுப் பிரைட் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். பள்ளியில் முதல் மூன்று இடங்கள் முறையே மாணவர் வைஷ்ணவ் மனீஷ்குமார் 93.40 சதவீதம், வர்மா இஷா 92.40 சதவீதம், சிங் சர்வாக்கியா 92.20 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர்.

சீத்தாகேம்பில் உள்ள ஸ்டார் உயர்நிலைப்பள்ளி 98.64 சதவீதம் தேர்ச்சி அடைந்தது.

ஜோகேஸ்வரியில் உள்ள பாம்பே தமிழர் பேரவை சொசைட்டி நிர்வகிக்கும் பீப்பிள்ஸ் வெல்பர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் புடானே பிரதமேஷ் அங்குஷ் 91 சதவீதம், மாணவி மஞ்ரேகர் அக்சதா அங்குஷ் 88.20 சதவீதம், சித்திக் அகமது பாஷில் 83.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

ஹோலி ஏஞ்சல் பள்ளி

முல்லுண்டு கிழக்கில் உள்ள ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பட்டேல் ஜில் மகேஷ் 98.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்ச்சி அடைந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் செல்வி சாமுவேல், முதல்வர் எடிசன் சாமுவேல் பாராட்டினர்.

தாராவி கம்பன் உயர்நிலைப்பள்ளி 92.59 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. பள்ளியில் மாணவர் பிரதீப் 75.40 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடமும், ரேணுகா தேவி 66.80 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், பவித்ரா 65.80 சதவீதம் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.

ராயல் சிட்டி ஆங்கில பள்ளி மாணவர்கள் 91.04 சதவீதம் தேர்ச்சி அடைந் தனர். மாணவர்கள் கான் ஷோயா 88.80, சேக் புஷ்ரா 85.60, ஜெய்ஸ்வர் லெட்சுமி 84.20 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

தானேயில்...

மாத்யமிக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் 91.04 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் சாலுங்கே அபிஜித் பாரத் 92, மாப்டி சினேகா ராஜேஸ் 85, தாட்வே பிரஜக்தா மனோகர் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

தானே நவ்பாடாவில் உள்ள செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் சக்சேனா சிவம் ராஜ்நாராயணன் 91.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், திஷாரி சர்வேஷ் ராஜேஸ் 88.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், குப்தா அமன்ராஜூ 87.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் எம்.இ.முத்து, செயலாளர் தங்கம்மாள், முதல்வர் சுப்பிர மணியம் பாராட்டினர்.

Next Story