சாலையோரங்களில் இருந்த 302 வாகனங்கள் பறிமுதல் பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை


சாலையோரங்களில் இருந்த 302 வாகனங்கள் பறிமுதல் பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 3:55 AM IST (Updated: 9 Jun 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 302 வாகனங்களை அப்புறப்படுத்தப்பட்டு வட்டாரம் வாரியாக 3 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 302 வாகனங்களை, காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வட்டாரம் வாரியாக 3 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் எந்த வழக்குகளிலும் சம்பந்தப்படவில்லை அல்லது எந்த நீதிமன்ற நடவடிக்கையும் நிலுவையில் இல்லை, என்று காவல்துறையின் மூலம் சான்று அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 302 வாகனத்தின் விவரத்தினை பார்வையிடலாம்.

அதன் அடிப்படையில் வாகனத்தின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் அவர்களை 15 நாட்களுக்குள் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story