தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டம் ஐகோர்ட்டில் அரசு தகவல்


தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:45 PM GMT (Updated: 8 Jun 2018 10:35 PM GMT)

தனியார் மருத்துவமனை களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படுவதாக ஐகோர்ட்டில் அரசு கூறியுள்ளது.

மும்பை, 

தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படுவதாக ஐகோர்ட்டில் அரசு கூறியுள்ளது.

பொதுநலன் மனு

புனேவை சேர்ந்த உதுல் போஸ்லே என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் ஏராள மான தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.

இவற்றில் பல மருத்துவமனைகள் விதி முறைகளை மீறி செயல்படு கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனைகள் மற்றும் ஆய்வுகளில் மராட்டியத்தில் செயல்பட்டு வரும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் மருத்து வமனைகள் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல்வேறு மருத்துவ மனை உரிய உரிமம் இல்லாமல் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்ததும் தெரியவந்துள்ளது.

எனவே இந்த மருத்துவ மனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கடுமையான சட்டம்

இந்த மனு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் குல்கர்னி அடங்கிய அமர் வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளித்து அரசு தரப்பு வக்கீல் அசுதோஷ் கும்பகோனி கூறியதாவது:-

தனியார் மருத்து வமனைகள் மற்றும் கிளினிக் குகளை ஒழுங்குப்படுத் துவதற்காக கடுமையான சட்டங்களை மாநில அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் சில மருத்துவ துறை உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்கள் இந்த சட்டத் திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள் ளனர். அவர்கள் சில கோரிக்கைகளையும் வலி யுறுத்தியுள்ளனர். அவர்களின் குறைகளை கேட்டு அதற்கேற்ப சட்டத் தில் மாற்றம் மேற்கொள்ள கமிட்டி அமைக்கப்பட்டு ள்ளது. அந்த கமிட்டி 3 வாரத்திற்குள் வரைவு அறிக்கை தயார் செய்துவிடும். விரையில் மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story