மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.53½ லட்சத்தில் மின்விசை சக்கரங்கள்


மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.53½ லட்சத்தில் மின்விசை சக்கரங்கள்
x
தினத்தந்தி 10 Jun 2018 3:45 AM IST (Updated: 10 Jun 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.53½ லட்சத்தில் மின்விசை சக்கரங்கள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி,

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மின்விசை சக்கரங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. எல்.ஜெயசுதா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், செல்வராஜ், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதர் கிராமத் தொழில் உதவி இயக்குனர் (பொறுப்பு) தி.மாணிக்கவேலு வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 263 பயனாளிகளுக்கு ரூ.53 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான மின்விசை சக்கரங்களை வழங்கி பேசினார்.

இதில் பயனாளிகள், அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பி.முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Next Story