மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு + "||" + The gold chain flush with the girl

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
புதுஏரி அருகே வந்த போது, அந்த வழியாக முகத்தில் துணியை கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி வசந்தா (வயது 35). ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வசந்தா நேற்று முன்தினம் தனது தாய் ஊரான உஞ்சினி கிராமத்திற்கு சென்று விட்டு சைக்கிளில் மருவத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். புதுஏரி அருகே வந்த போது, அந்த வழியாக முகத்தில் துணியை கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி விட்டு 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
3. போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு போலீஸ் விசாரணை
தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. களியக்காவிளை அருகே நள்ளிரவில் துணிகரம்: வீடு புகுந்து பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிப்பு
களியக்காவிளை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.