பெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


பெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:00 AM IST (Updated: 10 Jun 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்தனர்.

பெரியகுளம், 

பெரியகுளம், தென்கரை 25-வது வார்டு இந்திராபுரி தெருவில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெரியகுளத்தில் உள்ள தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பெண்கள், சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதேபோன்று பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டில் முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை என்று கூறி பேரூராட்சி அலுவலகத்தை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story