கன்னங்குறிச்சியில் மதுவில் விஷம்கலந்து குடித்து விவசாயி தற்கொலை


கன்னங்குறிச்சியில் மதுவில் விஷம்கலந்து குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2018 1:42 AM IST (Updated: 10 Jun 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

கன்னங்குறிச்சியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னங்குறிச்சி,

கன்னங்குறிச்சி 1-வது வார்டு கொத்துக்காரன் சமாதி பகுதியைச் சேர்ந்தவர் இருளக்கவுண்டர் (வயது 75), விவசாயி. இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த இருளக்கவுண்டர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story