முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்


முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:45 AM IST (Updated: 10 Jun 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறுவது மற்றும் சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அறையில் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறுவது மற்றும் சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அறையில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன் மற்றும் அரசு அதிகாரிகள், தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த கட்ட கூட்டம் வருகிற 12–ந் தேதி நடைபெற உள்ளது.


Next Story