குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் துப்புரவு ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்குள்ள சிங்கண்ண செட்டி தெருவில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் பரவி சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை,
சிந்தாதிரிப்பேட்டையில் துப்புரவு ஊழியர்கள் மூலம் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தினமும் சிங்கண்ண செட்டி தெருவில் குடியிருப்பு பகுதிகள் அருகே கொட்டப்படுகின்றன. உணவு கழிவுகளும் அங்கே அதிகம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகின்றன. கொசுக்களும் அதிகளவில் பெருகியிருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் பெருகுகின்றன.
சேரும் குப்பைகள் மறுநாள் காலை 8 மணிக்கு தான் லாரிகள் மூலம் அள்ளப்படுகின்றன. இதனால் அந்த வழியே செல்லும்போது மூக்கை பிடித்தபடியே செல்ல வேண்டியது உள்ளது. இதுகுறித்து துப்புரவு ஊழியர்களிடம் கேட்டால் பொறுப்பற்ற பதிலே விடையாக வருகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே சிங்கண்ண செட்டி தெருவில் குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story