மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 35 பேர் கைது + "||" + To cancel the Neet Exam option Trying to get involved in the train 35 people arrested

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 35 பேர் கைது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 35 பேர் கைது
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,

அப்போது ஏராளமானோர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...