மாவட்ட செய்திகள்

புதுப்பாளையம், மலையம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் + "||" + Putuppalaiyam, In the panchayat panchayats Mother planning camp

புதுப்பாளையம், மலையம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

புதுப்பாளையம், மலையம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம்,

இதற்கு கும்மிடிப்பூண்டி தனி தாசில்தார் லலிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 13 மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரிகள் பழனி, செல்வேந்திரன், மகாத்மா, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கும்மிடிப்பூண்டி தனி தாசில்தார் லலிதா பெற்று கொண்டார். இதில், 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 10 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடனடி தீர்வு காணப்பட்ட 3 மனுக்களுக்கு அதற்கான ஆணையை கும்மிடிப்பூண்டி தனி தாசில்தார் லலிதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். முடிவில் கிராம உதவியாளர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள 82, பனப்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 7 மனுக்களை பெற்றுகொண்டார். இதில் தனி தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அதிகாரி பிரித்தி, வருவாய் ஆய்வாளர்கள் காயத்திரி, ரவி, கிராம நிர்வாக அதிகாரிகள் செல்வராஜ், பிரகாஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவகி ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 4 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 3 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

முன்னதாக அனைவரையும் கிராம உதவியாளர்கள் சந்திரலேகா, கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில், ஜெயராமன் நன்றி கூறினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், மலையம்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பல்லாவரம் தாசில்தார் வில்பிரட்கிச்சிங் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக சான்றுகள் வழங்கப்பட்டது.

இதில் துணை தாசில்தார் நடராஜன், மலையம்பாக்கம் கோதண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சோழிங்கநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிக்கான அம்மா திட்ட முகாம் சோழிங்கநல்லூரில் நடந்தது. இந்த முகாமிற்கு தென்சென்னை தொகுதி எம்.பி. ஜெயவர்தன் தலைமை தாங்கினார். முகாமில் பட்டா பெயர் மாற்றம், பட்டா கேட்டு விண்ணப்பங்கள், மற்றும் முதியோர்உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. சோழிங்கநல்லூர் பொன்னியம்மன்கோவில், பரமேஸ்வரன்நகர், காட்டுத்தெரு, கிராம நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் 3 தலைமுறையாக குடியிருந்து வரும் ஏராளமானோர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி திரண்டு வந்து மனு அளித்தனர்.