தானேயில் கனமழை 2 சாலைகளில் நிலச்சரிவு வீடு, வாகனங்கள் சேதம்
தானேயில் கனமழை பெய்தது. 2 சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு, வாகனங்கள் சேதம் அடைந்தன.
தானே,
தானேயில் கனமழை பெய்தது. 2 சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு, வாகனங்கள் சேதம் அடைந்தன.
கனமழை
தானே மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. தானே, பிவண்டி, கல்யாண், முர்பாத், உல்லாஸ்நகர், அம்பர்நாத், சகாப்பூர் நகரங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தானேயில் பெய்த மழையின் போது கல்வா, மும்ரா, கோட்பந்தர், நவ்பாடா உள்ளிட்ட இடங்களில் 25-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. கனமழை காரணமாக மும்ரா பைபாஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவர் சரிந்து அங்குள்ள வீடுகளின் மேல் விழுந்தன.
நிலச்சரிவு
அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. மேலும் வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த நிலச்சரிவை தொடர்ந்து மும்ரா பைபாஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.
இதேபோல தானே வர்த்தக் நகரில் உள்ள ஒரு சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அந்த சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் மற்றும் ஒரு பள்ளி வேன் அங்குள்ள பெரிய பள்ளத்தில் பாய்ந்தன. இதில் 4 வாகனங்களும சேதம் அடைந்தன. அந்த வாகனங்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டன.
Related Tags :
Next Story