2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் தயார் அசோக் சவான் தகவல்


2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணிக்கு காங்கிரஸ் தயார் அசோக் சவான் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2018 10:30 PM GMT (Updated: 9 Jun 2018 10:11 PM GMT)

2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக மராட்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.

மும்பை, 

2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக மராட்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் மராட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வரும் 2019-ம் ஆண்டு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:- நாங்கள் கூட்டணி அமைப்பதில் நேர்மறையான சிந்தனையுடன் உள்ளோம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பால்கர் இடைத்தேர்தலில் நாங்கள் தோற்றுப்போனதற்கு பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறிப்போனதே முக்கியமான காரணம் ஆகும்.

ராகுல்காந்தியுடன் பேசுவோம்

மும்பை வரும் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியிடம் கட்சியினரின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்போம். மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் அவரிடம் கலந்துரையாடுவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், ஆர்.பி.ஐ. மற்றும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக பேசிவரும் சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கொள்கை மற்றும் கருத்தியலில் மாறுபாடு உள்ளதால் இரு கட்சிகளும் எங்களுடன் இணையும் கேள்விக்கே இடம் இல்லை” என தெரிவித்தார்.

Next Story