தூத்துக்குடி சம்பவத்தில் கைதான 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி சம்பவத்தில் கைதான 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சம்பவத்தில் கைதான 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
வன்முறை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். வாகனங்களுக்கு தீ வைப்பு, கலெக்டர் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏராளமானவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் கலவர வழக்கு தொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த கலீல்ரகுமான், முகமது இஷ்ரத், முகமது யூனுஸ், உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டையன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், வேல்முருகன் ஆகிய 6 பேரை சிப்காட் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோரின் பரிந்துரையின் பேரில், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, கலீல்ரகுமான் உள்ளிட்ட 6 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் அவர்கள் 6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story