மாவட்ட செய்திகள்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் வைத்திலிங்கம் எம்.பி. கருத்து + "||" + Anyone in the democratic country can start the party. Comment

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் வைத்திலிங்கம் எம்.பி. கருத்து

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் வைத்திலிங்கம் எம்.பி. கருத்து
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என திவாகரன் கட்சி தொடங்கியது பற்றி வைத்திலிங்கம் எம்.பி. கருத்து தெரிவித்தார்.
தஞ்சாவூர்,

அண்ணா திராவிடர் கழகம் என்று திவாகரன் புதிதாக கட்சி தொடங்கியதை பற்றி கேட்கிறீர்கள். நான் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால் புதிய கட்சி ஆரம்பித்தது பற்றி தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி ஆரம்பிக்கும் தலைவர்களை பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மக்கள் இவர்களை ஏற்று கொள்கிறார்களா? இல்லையா? என்பது பின்னால் தான் தெரியவரும். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இதனால் குறுவை சாகுபடிக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறக்க முடியாது.


காவிரி டெல்டா விவசாயிகளுக்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இயற்கை சூழ்நிலை இப்படி இருக்கும்போது, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு அமைப்பதற்காக அரசிதழில் மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமைக்கப்பட்டவுடன் நமக்கு கிடைக்கக்கூடிய உரிமை எப்போதும் கிடைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து போராடுவார். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கடும் முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.