கால்வாய்களும் தூர்வாரப்படும்: பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறப்பு கலெக்டர் ஷில்பா தகவல்

கால்வாய்களும் தூர்வாரப்படும்: பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறப்பு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2018 2:30 AM IST (Updated: 11 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தகவல் தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தகவல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஷில்பாவை, முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில் பாபநாசம் அணையில் இருந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், வடக்கு கோடை மேல் அழகியன் கால்வாய், தெற்கு கோடை மேல் அழகியன் கால்வாய், நதியுன்னி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் ஷில்பா, உடனடியாக கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக முதல்–அமைச்சரிடம் அனுமதி பெற்று பாபநாசம் அணையிலிருந்கு பயிர் சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story