மாவட்ட செய்திகள்

மானாமதுரையில் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை + "||" + The doctor committed suicide by drinking poison

மானாமதுரையில் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

மானாமதுரையில் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டாக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர்கள் மனோகரன்–கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்கள் இருவருமே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் சிவநாதன்(வயது25). இவர் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் மானாமதுரைக்கு வந்து தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் வி‌ஷம் குடித்துள்ளதாக அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை
பனையூர் பகுதியில் தனது 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
4. திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
சாமல்பட்டியில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
5. கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.