அரிமளத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு


அரிமளத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 10 Jun 2018 10:45 PM GMT (Updated: 10 Jun 2018 8:09 PM GMT)

அரிமளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் பிரசித்தி பெற்ற சேத்துமேல் செல்வ அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவையொட்டி நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என 3 பிரிவாக நடந்தது. இதில் பெரிய மாடுபிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசு சிவகங்கை மாவட்டம் வேலங்குடி சோலையன் மாடும், 2-வது பரிசை புதுக்கோட்டை பாலகுடிபட்டி கோபிநாத் மாடும், 3-வது பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாடும், 4-வது பரிசை அரிமளம் சேத்துமேல் செல்வஅய்யனார் மாடும் பெற்றன.

நடுமாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி பொன்னழகி அம்மன் மாடும், 2-வது பரிசை நல்லிப்பட்டி நாச்சியார் மாடும், 3-வது பரிசை அரிமளம் சின்னராசு மாடும், 4-வது பரிசை மதுரை மேலூர் சாலினி மாடும் பெற்றன. கரிச்சான் மாடு பிரிவில் 26 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அரிமளம்-ராயவரம் சாலையில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தை இருபுறமும் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் நின்று கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரிமளம் ஊரார்கள், ஊர் அம்பலக்காரர்கள், கிராம மக்கள், இளைஞர்கள், மாட்டு வண்டி ரசிகர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் அரிமளம் போலீசார் செய்திருந்தனர். 

Next Story