சாலை விபத்தில் சிக்கிய திருச்சி கராத்தே மாஸ்டரின் மகள் மூளைச்சாவு அடைந்தார்


சாலை விபத்தில் சிக்கிய திருச்சி கராத்தே மாஸ்டரின் மகள் மூளைச்சாவு அடைந்தார்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 11 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியை சேர்ந்த கராத்தே மாஸ்டரின் மகள் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதயம் உள்ளிட்ட அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.

திருச்சி,

திருச்சியை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டர் வாசுதேவன். இவர் திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் போலீஸ் பயிற்சி கல்லூரியில் கராத்தே தற்காப்பு கலை பயிற்றுவித்து வருகிறார். இவருடைய மகன்கள் வெங்கட், கராத்தே முத்துக்குமார், மகள் தேவசங்கரி என்கிற ரதி (வயது 38). வெங்கட்டும், கராத்தே முத்துக்குமாரும் திருச்சியில் வக்கீல்களாக பணியாற்றி வருகிறார்கள்.

தேவசங்கரி திருமணமாகி பெங்களூருவில் தனது கணவர் ஆனந்த பிள்ளையுடன் வசித்து வந்தார். ஆனந்த பிள்ளை சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தேவசங்கரி இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய இதயம், 2 சிறு நீரகங்கள், கண் விழித்திரைகள், கல்லீரல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் உதவியுடன் எடுத்து தானமாக கொடுக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கராத்தே முத்துக்குமார் கூறுகையில் ‘எனது சகோதரியின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 5 பேர் வாழ்வு பெற இருக்கிறார்கள்’ என்றார். 

Next Story