தகிசரில் கனமழையின் போது மரம் விழுந்து 13 வயது சிறுமி பலி தாதரில் 4 பேர் படுகாயம்
தகிசரில் கனமழையின் போதுமரம் விழுந்து 13 வயது சிறுமி உயிரிழந்தாள். தாதரில் மரம் முறிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
தகிசரில் கனமழையின் போதுமரம் விழுந்து 13 வயது சிறுமி உயிரிழந்தாள். தாதரில் மரம் முறிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிறுமி சாவு
மும்பையில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. மழையின் போது, பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இந்தநிலையில் தகிசர் எஸ்.என்.துபே சாலையில் இரவு 9.30 மணியளவில் கனமழையின் போது ஒரு மரம் திடீரென வேரோடு சாய்ந்தது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த சிறுமி மீது அந்த மரம் விழுந்து அமுக்கியது. இதில், அந்த சிறுமி தலையில் பலத்த காயம் அடைந்தாள்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
4 பேர் படுகாயம்
தகவல் அறிந்து வந்த போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பலியான சிறுமியின் பெயர் ரிஸ்தி முங்ரா(வயது13) என்பது தெரியவந்தது.
இதேபோல தாதர் சிவாஜி பார்க் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story