கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு


கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-குமுளி இடையே மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளிக்கு தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி வழியாக சாலை செல் கிறது. தென்மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் இம்மலைப்பாதை வழியே செல்கிறது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மலைப்பாதையில் வழித்துணை மாதாகோவில் மேல்புறம் உள்ள ‘எஸ்’ வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குமுளி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி வாகனங்கள் ஒருபுறமாக செல்லும்படி பாதை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மண்சரிவினால் குமுளி மலைப்பாதையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Next Story