புழலில் பிரபல கொள்ளையன் தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம், புழல், மாதவரம், வடபழனி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் கன்னடப்பாளையம் ஜீவா மெயின் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற கிணறு ரமேஷ்(வயது 39). பிரபல கொள்ளையனான இவர் மீது செங்குன்றம், புழல், மாதவரம், வடபழனி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் புழல் போலீசார், இவரை ரவுடி மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ரமேஷ், தனது அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய அக்கா யசோதா, புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது வீட்டில் ரமேஷ் எழுதி வைத்து இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்து இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story