புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம்


புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:44 PM GMT)

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களின் வினியோகம் தொடங்கியது.

புதுக்கோட்டை,

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களின் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு மருத்துவ சேர்கைக்கான விண்ணப்பம் வினியோகத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வருகிற 18-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பெற வரும் மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு ரூ.ஆயிரத்திற்கும், அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ரூ.500-க்கும் வரைவோலை (டி.டி.) எடுத்துவர வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். எனவே மருத்துவ படிப்பில் சேர விரும்பும் தகுதி உள்ள மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தினை பெற்று பயன்பெற வேண்டும்” என்றார்.

இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சாரதா உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story