காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவு துறை அலுவலகம் முன்பு புதுச்சேரி மாநில கூட்டுறவு துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில கூட்டுறவு துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவு துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் மேகநாதன் முன்னிலை வகித்தார். சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மோகனசுந்தரம் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கூட்டுறவு துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் பதவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 7 அதிகாரிகளுக்கு துணை பதிவாளர் பதவி உயர்வு வழங்காமல் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் காலம் கடத்தி வருவதை கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக துணைப்பதிவாளர் பதவி வழங்க வேண்டும், கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 50 சதவீத பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் பணிநியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story