குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:15 PM GMT (Updated: 11 Jun 2018 11:15 PM GMT)

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 224 மனுக்கள் பெறப்பட் டன. இந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் காங்கேயம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் சார்பில், தாய் மற்றும் தந்தையை இழந்த ஒரு மாணவனுக்கு கல்வி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையும் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) முருகன் மற்றும் துணை கலெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story