நிர்மலாதேவி வழக்கு: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு காவல் நீட்டிப்பு


நிர்மலாதேவி வழக்கு: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2018 5:15 AM IST (Updated: 12 Jun 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போன் மூலம் அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமிக்கு வருகிற 25–ந் தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போன் மூலம் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.

இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி அவர்கள் இருவருக்கும் வருகிற 25–ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.


Next Story