டெலிகாம் என்ஜினீயர் வேலை
மத்திய நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் என்ஜினீயர், உதவி என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று மெக்கான். உருக்குத் துறை சார்ந்த காண்டிராக்ட் திட்டங்களை நிர்வகிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் இந்த நிறுவனம் ஒரு மினி ரத்னா அந்தஸ்து கொண்டது.
தற்போது இந்த நிறுவனத்தில் சீனியர் டெலிகாம் என்ஜினீயர், உதவி என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில், எலக்ட்ரிக்கல்), மேேனஜர், என்ஜினீயர், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 36 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 31-5-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் போன்ற பிரிவில் என்ஜினீயரிங், தொழில்நுட்பம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங், எம்.பி.ஏ., பி.காம். படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.
விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15-6-2018. இது பற்றிய விவரங்களை www.meconlimited.com.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story