துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் திடீர் ஆய்வு கலவர பகுதிகளையும் பார்வையிட்டார்


துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தூத்துக்குடியில் திடீர் ஆய்வு கலவர பகுதிகளையும் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 13 Jun 2018 3:00 AM IST (Updated: 12 Jun 2018 8:46 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் திடீர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் தூத்துக்குடியில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அவர் கலவரம் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

துப்பாக்கி சூடு 

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை 

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாருடன் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து 5 வழக்குகளிலும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார். கூடுதல் ஆவணங்களை சேகரிப்பது தொடர்பாகவும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் பார்வையிட்டார். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், பனிமயமாதா ஆலய பகுதிகளில் திடீரென ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ், போலீஸ் வாகனத்தை தவிர்த்து தனியார் வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Story