மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Taskmakers protest demonstrated 15 point demands

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் வெங்கடேசன், செல்வராசு, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில செயலாளர் சவுந்தரராசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், சீருடை, பணிப் பதிவேடு, சம்பள ரசீது போன்றவை வழங்கிட வேண்டும். 

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு ஈட்டுறுதி திட்டத்தில் இணைத்திட வேண்டும். ஓய்வு பெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்
30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. முசிறியில் கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டம்
முசிறியில், அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி விடுதி முன் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. இளநிலை உதவியாளர்கள் நியமிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இளநிலை உதவி யாளர்கள் நியமிக்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.