மொடக்குறிச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மொடக்குறிச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 Jun 2018 4:00 AM IST (Updated: 13 Jun 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மொடக்குறிச்சியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மொடக்குறிச்சி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. முகாமுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மாநில கொள்கைபரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, குழந்தைகள் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.பி.சண்முகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகர், பேரூர் செயலாளர்கள் சண்முகசுந்தரம் (அவல்பூந்துறை), சரவணன் (மொடக்குறிச்சி), விஜயகுமார் (அறச்சலூர்), மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஈ.ஆர்.விவேக், மாநகர அமைப்பாளர் சாநவாஸ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story